MISSION

Sri Lanka & Canada based Vijayalayan Foundation is a non-profit organisation registered in 2023. The primary goal of this foundation is to support students from economically disadvantaged backgrounds by supplying them with the necessary educational resources and materials for their learning journey. 

Many students encounter substantial financial burdens while pursuing higher education or attending university, which involve considerable financial obligations such as extra tuition, housing expenses, text books, and other educational materials, as well as travel costs. 

The transformative influence of education can refine an individual, enabling them to confront life’s challenges. To identify deserving students, a strict scoring system is in place . our commitment to service persists through the efforts of our representatives in each district, ensuring we find the right students. Priority consideration will be given to children who have lost their parents and those with special needs.

எங்கள் நோக்கம்

இலங்கை, கனடா ஆகிய நாடுகளைத் தளமாகக் கொண்டு இயங்கும் விஜயாலயன் அறக்கட்டளையானது 2023ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இலாப நோக்கற்ற நிறுவனமாகும். 

இவ் அறக்கட்டளையின் முக்கிய நோக்கம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களச் சேர்ந்த மாணவர்களுக்கு அவர்களின் கல்வி, மற்றும் கல்வி கற்பதற்குத் தேவையான கற்றல் உபகரணங்களை வழங்குவதன் மூலம் அவர்களை மேம்படுத்துவதே ஆகும். 

பெரும்பாலான மாணவர்கள் உயர்நிலைப் படிப்பை (A/L) அல்லது அதைத் தொடர்ந்து பல்கலைகழகத்தில் கற்கும் போது பாரிய நிதி நெருக்கடியை எதிர் கொள்கின்றனர். கூடுதல் கல்வி, தங்கும் விடுதி, பாடப் புத்தகங்கள், கற்றல் உபகரணங்கள், மற்றும் பயணம் போன்ற கணிசமான நிதி அவர்களுக்குத் தேவைப்படுகின்றது. 

ஒரு மனிதனை நாகரீகமாக்கி, வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும் சக்தி கல்விக்குள்ளது. இவ் அறக்கட்டளை மூலம் தகுதியான மாணவர்களை அடையாளம் காண கடுமையான மதிப்பெண் முறை உள்ளது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் செயற்படும் எமது பிரதிநிதிகளின் தன்னலமற்ற சேவை மூலம் சரியான மாணவர்களை இனம் கண்டு; எமது சேவையைத் தொடரவுள்ளோம். பெற்றோர்களை இழந்த பிள்ளைகள், விசேட தேவையுள்ள மாணவர்களின் விண்ணப்பங்கள் முன்னுரிமை அடிப்படையில் கருத்தில் கொள்ளப்படும்.