செயற்பாடுகள்

  • ஆவணி 23 2023 அன்று கரைதுறைப்பற்று செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளியவளை மேற்கு நாவற்காடு என்னும் இடத்தில் அமைந்துள்ள பொதுநோக்கு மண்டபத்தில் ; மாலை நேர கல்விநிலையம் ஒன்றை ஆரம்பித்துள்ளோம். இவ் விடத்திற்குத் தேவையான மின்சாரம், மின்விசிறிகள், நீர்வழங்கல், கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் என்பன வழங்கப்பட்டன. இப் பாடசாலையில் 50 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இப்பிரதேசத்தைச் சேர்ந்த தகுதியான ஆசிரியர் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

  • இவ் ஆரம்ப நிகழ்விற்கு விஜயாலயன் அறக்கட்டளையின் நிறுவனர்களான திரு.இரா.மதியழகன், திருமதி.ம.விஜயராணி. ஹட்டன் கல்வி வலயத்தின் முன்னாள் சேவைக்கால ஆலோசகர் திரு செ. கலைச்செல்வன், முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் திரு. சு. ஜெகதீசன், இணைப்பாளர் திரு. நா. பார்த்தீபன் ஆகியோர் கலந்து கொண்டனர். பல்கலை கழகத்திற்கு தெரிவு செய்யப்படுள்ள நாவற்காட்டைச் சேர்ந்த மாணவிக்கு மாதாமாதம் உதவித்தொகை வழங்கப்படுகின்றது.

 

  • முல்லைத்தீவு உடுப்புக்குளம் தமிழ் வித்தியாலயத்தில் கல்விகற்கும் மாணவர்களுக்கு அதிபர் திரு. பி.குணபாலன் தலைமையில் டிசம்பர் 4ம் திகதி மழைக் கவசங்கள் வழங்கப்பட்டன. இந் நிகழ்விற்கு முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் திரு.சு.ஜெகதீசன், இணைப்பாளர் திரு. நா. பார்த்தீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

  • பெப்ரவரி 9ம் திகதி விஜயாலயன் அறக்கட்டளை மலையகத்தில் தனது காலைப்பதித்தது. பொகவந்தலாவை நு/ஹோலி றோசரி தமிழ் மகா வித்தியாலயத்தில் அதிபர் திரு. கோ. குணசீலன் அவர்களின் தலைமையில் ஆரம்ப விழா நடைபெற்றது. இவ் நிகழ்வில் அயல்ப் பாடசாலை அதிபர்கள், உப அதிபர்கள், ஆசிரியர்கள். மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். சிறப்பு அதிதிகளாக முன்னாள் சென் மேரிஸ் கல்லூரி அதிபர் திரு. ந. பாலசுந்தரம், ஓய்வுபெற்ற சேவைக்கால ஆலோசகர்களான திரு. கணபதிப்பிள்ளை, திரு. செ. கலைச்செல்வன், உப அதிபர் திருமதி. கு. பிரமிளா ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

  • இவ் நிகழ்வின் போது இரண்டு பல்கலைக் கழக மாணவர்கள். 10ம் ஆண்டில் கல்வி கற்கும் 6 மாணவர்களுக்கு புலமைப் பரிசில் உதவித் தொகை வழங்கப்பட்டது.

 

  • பெப்ரவரி 12ம் திகதி முளியவளையைச் சேர்ந்த பல்கலை கழக மாணவி ஒருவருக்கும், 11ம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவருக்கும், தகப்பனை இழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகளுக்கும் புலமைப் பரிசில் உதவித் தொகை வழங்கப்பட்டது.

Activities

    • On August 23, 2023 We opened an evening school offering free education for the convenience of students living in Naavatkaadu under Maritime Pattu division and water lines, electricity, celling fans, amenities have been supplied for that specific purpose.There are 60 students enrolled in this school and we have appointed qualified teachers from the local areas. Necessary learning materials and equipment such as white boards, markers have been supplied for the students. The founders of Vijayalayan Foundation , Mr.Mathiyalaghan Mrs.Vijayarani, and HattonEducation zone former in service advisor Mr.s.Kalaichelvan. Former member of the Regional council Mr.S.Jegadeesan, Foundation Coordinator Mr.N.Partheepan were all present at the inaugural event.

    • On December 4 ,2023 under the leadership of Principal Mr.P.Gunapalan ,rain coats were distributed to the students of Mullaitivu Uddupukulam Tamil Vidyalayam. Former member of the Regional council Mr.S.Jegadeesan, Foundation Coordinator Mr.N.Partheepan participated in the occasion.

    • On February 09, 2024. Vijayalayan Foundation Launched in Hill Country, at N/Holy Rosary Tamil Maha Vidyalayam. Bogawantalawa. School Principal Mr.K.Gunaseelan was Presided the event .Principals ,Vice Principals,Teachers of neighbouring schools participated in this inauguration event.

    • Student of two universities, 6 students studying grade 10 were awarded scholarships.